உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காமாட்சி அம்மன் கோவில் உற்சவங்கள் கையேடு: விஜயேந்திரர் வெளியிட்டார்

காமாட்சி அம்மன் கோவில் உற்சவங்கள் கையேடு: விஜயேந்திரர் வெளியிட்டார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் உள்ளிட்ட வைபவங்கள் குறித்த விபர கையேடு ஆண்டுதோறும் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடுவது வழக்கம்.அதன்படி, குரோதி தமிழ் ஆண்டில், காமாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் உள்ளிட்ட வைபவங்கள் குறித்த கையேடு வெளியீட்டு விழா நடந்தது.காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவில் உற்சவம் குறித்த கையேட்டை வெளியிட்டார். கோபாலபுரம் பொறியாளர் மணி அய்யர் பெற்றுக் கொண்டார்.கோவில் உற்சவம் குறித்த வடிவமைப்பை கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை