உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தனியாரின் கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய காஞ்சிபுரம் கலெக்டர் வளாகம்

தனியாரின் கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய காஞ்சிபுரம் கலெக்டர் வளாகம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கலெக்டர் வளாகத்தில், எஸ்.பி.,அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வணிகவரித் துறை அலுவலகம் என, ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.அரசு அதிகாரிகளுக்கு பயன்படுத்தப்படும் கார், ஜீப் போன்ற வாகனங்கள் நிறுத்த, கலெக்டர் வளாகத்தில் அரசு சார்பில் நிழற்கூடங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களை, தனி நபர் சிலர் ஆக்கிரமித்து, தங்களது சொந்த கார்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், அரசு வாகனங்களை வெயிலிலும், மழையிலும் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக, அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தனி நபர்கள் தங்களது கார்களை வாடகை செலுத்தி, வெளியிடங்களில் நிறுத்துவதை தவிர்த்து, கலெக்டர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு நிழற்கூடங்களில் நிறுத்தி தொந்தரவு செய்கின்றனர். அதுபோன்ற கார்களை போலீசார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை