உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை காஞ்சி அரசு பள்ளியில் மாணவியர் அவதி

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை காஞ்சி அரசு பள்ளியில் மாணவியர் அவதி

காஞ்சிபுரம், : சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் உள்ள மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 40 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு மே 8ல் நடந்தது.அதிநவீன கழிப்பறை கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறை திறக்கப்பட்டு, மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. மாணவியரின் எண்ணிக்கை ஏற்ப பள்ளியில் கழிப்பறை இல்லாததால், மாணவியர் இயற்கை உபாதை கழிக்க அவதிக்குள்ளாகினர்.எனவே, புதிதாக கட்டப்பட்ட அதிநவீன கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறியதாவது:ஏர்போர்ட், ஸ்டார் ஹோட்டல்களில் உள்ளதைப் போன்று எலக்ட்ரானிக் சாதனம் வாயிலாக, சென்சாரில் இயங்கும் வகையில் தானியங்கி அதிநவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.நவீன கழிப்பறையில் சில, டெக்னிக்கல் ஒர்க் நடந்து வருகிறது. மேலும், கழிப்பறையை பயன்படுத்தும்போது, எந்தவித பழுதும் ஏற்படாமல் இருக்க,சென்சாரில் இயங்கும் அனைத்து குழாய்களும், மின்னணு சாதனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.மின்தடை ஏற்பட்டாலும் தடையின்றி நவீன கழிப்பறை இயக்கும் வகையில், சோலார் சிஸ்டமும் பொருத்தப்பட உள்ளது. இப்பணி முழுமை பெற்றவுடன் ஒரு வாரத்தில் நவீன கழிப்பறை திறக்கப்பட்டு, மாணவியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை