உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி; சகதியான சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் : புகார் பெட்டி; சகதியான சாலை சீரமைக்கப்படுமா?

சகதியான சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, ஓரிக்கை ஜீவானந்தம் முதல் தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், தார் சாலை, சிமென்ட் சாலை இல்லாமல், மண் சாலையாகவே உள்ளதால், மழைக்காலங்களில் சகதி சாலையாக மாறி விடுகிறது.இதனால், நடந்து செல்லும் முதியோர், சிறுவர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் சகதியில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இருசக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள ஜீவானந்தம் முதல் தெருவிற்கு, சாலை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி