உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் முடிவு துளிகள்..

காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் முடிவு துளிகள்..

* காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்திற்குள், ஓட்டு எண்ணும் பணியை புகைப்படம் எடுக்க கேமராவுடன் சென்ற நாளிதழின் புகைப்படகாரர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அனுமதி மறுத்து, வெளியே செல்லுமாறு கூறினார். இதனால், புகைப்படகாரர்களுக்கும், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.* காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை சார்பில், மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், உடல் சுகவீனம் ஏற்பட்ட தேர்தல் ஊழியர்களுக்கு மருத்துவ குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்த்து, நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரை வழங்கினர்.* காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், செய்தியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில், தேர்தல் ஊழியர்கள் ஓய்வு எடுத்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை