உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துளிகள்

காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துளிகள்

* காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல், ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஸ்டாங் ரூமில் இருந்து, ஓட்டுப்பதிவு பெட்டிகளை எடுத்து செல்வதற்கு, வருவாய் துறை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கு பச்சை நிறமும். மதுராந்தம் தொகுதிக்கு புளு நிறமும். செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு சிவப்பு நிறம் இருந்தன. உத்திரமேரூர் தொகுதிக்கு மஞ்சள் நிறம் என, தனித்தனி நிறங்களில் சீருடை அணிந்திருந்தனர்.* இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே தொகுதி பெயர் அச்சடிக்கப்பட்டு இருந்தன. * ஓட்டு எண்ணும் மையத்திற்கு, கேமரா மற்றும் மொபைல் போன்களை எடுத்து செல்ல, நிருபர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின், கேமரா வைத்திருப்பவர்களை மட்டுமே மொபைல் இன்றி அனுமதி அளித்தனர்.* இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பசுமை நிழல் வலை அமைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அதில் நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி