உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்

காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராம பேருந்து நிறுத்தத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, சிதிலமடைந்து காணப்படுகிறது.மழைக்காலத்தில் நிழற்குடை கட்டடத்திற்குள் அதிகமான மழை நீர் சொட்டுகிறது. இதனால், அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை இருந்தும், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, காவணிப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை