உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்ணவாக்கம் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குண்ணவாக்கம் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கத்தில் எட்டி அம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவிலான இக்கோவிலுக்கு மண்டபத்துடன் கூடிய விமான கோபுரம் கட்டி வழிபட அப்பகுதியினர் தீர்மானித்தனர்.அதன்படி, நன்கொடை மூலம் சில ஆண்டுகளாக இக்கோவில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கோவில் திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக கடந்த 31ம் தேதி, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.நேற்று காலை, நாடி சந்தனம், தம்பதி சங்கல்பம், பூர்ணாஹூதி மற்றும் காலை 10:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில்,குண்ணவாக்கம், பாண்டவாக்கம், வெண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ