உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை

காஞ்சிபுரம்: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷெர்லி, 24; இவர், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரியில் உள்ள விடுதியில் தங்கி ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், விடுதியில் உள்ள ஐந்தாவது மாடியிலிருந்து, நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு குதித்து, தற்கொலை செய்து கொண்டார். பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார், விடுதிக்கு வந்து உடலை கைப்பற்றி, அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.விசாரணையில், 'கல்லுாரியில் பயிலும் சக மாணவர் ஒருவரை, ஷெர்லி காதலித்து வந்துள்ளார். இதில், ஏற்பட்ட பிரச்னையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மன அழுத்தம் காரணமாக, வேலுாரில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் எனவும், காதல் விவகாரத்தினாலேயே அவர் இறந்தார்'என போலீசார் திட்டவட்டமாகதெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை