மேலும் செய்திகள்
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
18 hour(s) ago
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
18 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாடு, ஏனாத்துார் மடுவு அருகே உள்ளது. இங்கு, ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த சுடுகாட்டிற்கு போதிய குடிநீர், சாலை, சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை புதைக்கும் போது, ஈமச்சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதியின்றி சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.எனவே, ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகர் கிராம சுடுகாட்டிற்கு சிமென்ட் சாலை, கை பம்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago