| ADDED : மே 29, 2024 06:33 AM
திருவள்ளூர் : சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை, சுற்றுலா பேருந்து, வேன், கார், லாரி, இருசக்கர வாகனம் என தினமும் 1 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில் திருமழிசை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் உள்ள இணைப்பு சாலை மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.இதனால் இந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.சாலையில் மாட்டுச்சாணம் குவிந்து கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால், அதிவிரைவு நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.