உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிவதற்குள் கலைக்கக்கூடாது

ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிவதற்குள் கலைக்கக்கூடாது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அயிமிச்சேரி கிராம ஊராட்சி கட்டடத்தில், வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்திற்கு, அதன் தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவதற்கு முன் கலைக்கக்கூடாது.முன் கூட்டியே கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கூட்டமைப்பு செயலர் வள்ளியம்மாள், பொருளாளர் லெனின்குமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ