உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * செய்தி மட்டும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

* செய்தி மட்டும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடியில் இருந்து, சிறுபினாயூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையோரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதி விவசாய பம்ப் செட்டுகள், குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, இப்பகுதியில் உள்ள இரு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக உள்ளன. இதனால், அவ்வழியே வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் நெல் அறுவடை வாகனங்கள் ஆகியவை செல்லும்போது, மின் கம்பிகள் உரசி மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில், மின் கம்பிகள் எந்நேரத்திலும் அறுந்து விழும் என்கிற அச்சத்தோடு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை இழுத்து கட்ட, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை