உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துாா் வார சந்தையால் நொிசல்

குன்றத்துாா் வார சந்தையால் நொிசல்

குன்றத்துார்:குன்றத்துார் ----- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையை ஒட்டியுள்ள குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம், சிறுகளத்துார், பூந்தண்டலம் ஊராட்சிகளில், மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.அதனால், அவர்கள் தேவைக்கான வணிக கடைகளும் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, இந்த நெடுஞ்சாலையில் நந்தம்பாக்கம் முதல் அஞ்சுகம் நகர் வரை 2 கி.மீ., துாரத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, சந்தை அமைக்கப்படுகிறது. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஒரே இடத்தில் கிடைப்பதால், இங்கு பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாலையோரம் கடைகள் அமைத்து, சந்தை இயங்கும் நிலையில், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்வதால், நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, இந்த சந்தையை ஒழுங்குப்படுத்த போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ