| ADDED : ஜூன் 17, 2024 03:29 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டு காலனி, மிலிட்டரி சாலையில் இருந்து, பிருந்தாவன் நகரை ஒட்டியுள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்து,பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், தனியார் காஸ் சிலிண்டர் கிடங்கு எதிரில், சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களின் கிளைகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.இதனால், கனரக வாகனம் வரும்போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மீது சீமை கருவேல மரத்தின் முட்கள் பதம் பார்த்து விடுகின்றன.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள சீமை கருவேல மரத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.