உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஸ்ரீபெரும்புதுாரில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஸ்ரீபெரும்புதுாரில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, பெங்களூரு பிரதான சாலை ஆகியவை முக்கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுாருக்குள் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன.இச்சாலைகளில் தனியார் மருத்துவமனை, உணவகங்கள், வங்கிகள், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதேநேரம், வணிக கட்டடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் இல்லை. இதனால், இங்கு வருவோர், தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.இதனால், சாலை குறுகலாகி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குஉள்ளாகின்றனர்.சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி