உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

உத்திரமேரூர், : உத்திரமேரூர் அடுத்த நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள், 73. இவர், கடந்த 9ம் தேதி இரவு, வழக்கம்போல் தன் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார்.நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு, அன்னம்மாளை பாம்பு கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அன்னம்மாள் உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்கு பதிந்த உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை