உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

காஞ்சிபுரம்:ஆற்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 46; இவர், சோழவரம் அருகே குவாரியில் துளை போடும் பணி செய்து வந்துள்ளார். குவாரி விடுமுறை நாட்களில், ஆற்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இந்நிலையில், ஆற்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் நேற்று காலை வேலை செய்தபோது, மின்சாரம் பாய்ந்து குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் சதீஷ், மாகரல் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ