உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

உத்திரமேரூர் மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,300 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில், போதுமான வகுப்பறை வசதி இல்லாததால், மாணவியர் இடநெருக்கடிக்கு மத்தியில் பயின்று வருகின்றனர்.மேலும், பள்ளியில் உள்ள பழைய கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதால், அதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை இருந்து வருகிறது.இதனிடையே, கடந்த ஆண்டு, இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 63.54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான கட்டுமான பணி துவங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. புதிய வகுப்பறை திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி