உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 68 பயனாளிகளுக்கு ஜமாபந்தியில் பட்டா

68 பயனாளிகளுக்கு ஜமாபந்தியில் பட்டா

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் தாலுக்காவில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமின் இறுதி நாளான நேற்று, 68 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.ஸ்ரீபெரும்புதுார் தாலுக்காவில், ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம், கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு வேண்டி மனு அளித்தனர்.அதில், தகுதி பெற்ற 68 பயனாளிகளுக்கு, ஜமாபந்தியின் இறுதிநாளான நேற்று, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பட்டா வழங்கினார்.அதேபோல, முழு புலம் பட்டா 63 பேருக்கும், உட்பிரிவு பட்டா 43 பேருக்கும், ரேஷன் கார்டு 60 பேருக்கும் என, மொத்தம் 234 பயனாளிகளுகுக்கு, 40.92 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ., வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணக்கண்ணன், தாசில்தார் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை