உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலவாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சாலவாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சாலவாக்கம், அரசு துறை சார்ந்த சேவைகள் ஊரகப் பகுதிகளில் எளிதாகவும், விரைவாகவும் சென்று சேரும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் செயல்படுத்தப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் துவங்கிய முதற்கட்ட முகாமில், மாநகராட்சிகளில் 8 முகாம், நகராட்சிகளின் 4, பேரூராட்சிகளில் 3 மற்றும் ஊராட்சிகளில் 15 என, மாவட்டத்தில் 30 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளன.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கடந்த 11-ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, 54 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியில் நேற்று, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் இதில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா, சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோன்று வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை ஊராட்சியிலும் நேற்று, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ