| ADDED : ஆக 22, 2024 06:47 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. இதில், காட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி அளித்த பொது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:காட்டாங்குளம் கிராமத்தில், குளக்கரை அருகே உள்ள கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பொது வழியை தடை செய்துள்ளார்.இதனால், இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களுக்குச் செல்ல முடியாமலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வழி இல்லாமலும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்து, உத்திரமேரூர் தாசில்தார் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த உத்தரவை பெற்றுக் கொண்ட ஆக்கிரமிப்பாளர், 6 மாதங்களாகியும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், இப்பகுதி விவவாசிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.எனவே, காட்டாங்குளம் குளக்கரை அருகே உள்ள நத்தம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.