உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது குடித்ததை கண்டித்ததால் பெட்ரோல் குண்டு வீச்சு

மது குடித்ததை கண்டித்ததால் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை : -போரூர், காரம்பாக்கம், பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் கவியரசு, 22. கார் ஓட்டுனர். இவரது வீட்டின் அருகே, அவரது தம்பி பாலாஜி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் முருகன், 20 ஆகிய இருவரும் நேற்று அதிகாலை மது அருந்தினர். இதை கவியரசு கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகன், கவியரசு மற்றும் அவரது தாயுடன் தகராறு செய்தார். சற்று நேரத்தில் திரும்பி வந்த முருகன், பெட்ரோல் நிரப்பிய இரு 180 எம்.எல்., மது பாட்டில்களை, வீட்டின் பின்புறம் வீசி விட்டு தப்பி சென்றார். இதில், ஒரு பெட்ரோல் வெடிகுண்டு பெரும் சத்தத்துடன் வெடித்தது.புகாரின் படி வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ