உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குருவிமலை கோவில் திருவிழா பேனரில் நடிகையின் படம்

குருவிமலை கோவில் திருவிழா பேனரில் நடிகையின் படம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை கிராமத்தில், மாப்பிள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், நாகாத்தம்மன், செல்லியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலுக்கு, இன்று, 12ம் ஆண்டு ஆடி வெள்ளி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த கிராமத்தினர் திட்டமிட்டிருந்தனர்.இந்நிகழ்ச்சியொட்டி, அந்த ஊர் இளைஞர்கள், சிறுவர்கள் 8 பேர் இணைந்து, கோவில் திருவிழாவுக்கு பேனர் அச்சடித்து ஊரில் வைத்தனர்.அதில், நடிகை மியா காலிபா புகைப்படத்தை, பால்குடம் எடுப்பது போன்று அச்சடித்துள்ளனர். இந்த பேனரால் கிராமத்தில் மட்டுமல்லாமல், அருகில் உள்ள காஞ்சிபுரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த செய்தி சமூக வலைதலங்களில் வைரலாக பரவியதையடுத்து, மாகரல் போலீசார் சென்று, பேனரை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை