மேலும் செய்திகள்
சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு
20-Aug-2024
காஞ்சிபுரம்:விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், மூன்று ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட 59 நீர்நிலை ஒட்டியுள்ள கரையோர பகுதியில், மூன்று லட்சம் பனை விதைகள் நடவு செய்துள்ளனர்.நான்காவது ஆண்டில் 1 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து இந்நிகழ்ச்சியின் துவக்க விழா கடந்த 8ம் தேதி வயலக்காவூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் நடவு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்ட களப்பணியாக வாலாஜாபாத் அடுத்த சேர்காடு ஏரிக்கரையில் நடந்தது.இவ்விழாவில், வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், கோல்டன் ஹாட்ஸ் லயன் சங்கம், காஞ்சி அன்னத்திரம், பாலாறு லயன் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, 5,000 பனை விதைகளை நடவு செய்தனர். மரக்கன்று நடும் விழா
பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பில், சிறுகாவேரிபாக்கம் - திம்மசமுத்திரம் சாலையோரம் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், பங்கேற்ற தன்னார்வலர்கள் இலுப்பை, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், பூவரசு உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் செடிகளை மேயாமல் இருக்க துணி வலை அமைத்தனர்.
20-Aug-2024