உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

மாநகராட்சி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு பகுதி, 2010ல், நத்தப்பேட்டை ஊராட்சியாக இருந்தபோது, சின்ன வேப்பங்குளக்கரையில், ஊராட்சி கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. பின், நத்தப்பேட்டை ஊராட்சி, காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.தற்போது, இந்த கட்டடம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கட்டடத்தின் கூரையில் வளர்ந்துள்ள அரசமர செடியின் வேர்களால், கட்டடத்தின் 'சன்ஷேடு' பகுதியில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் சரிந்து விழுந்துள்ளது.நாளடைவில் கட்டடம் வலுவிழந்து முற்றிலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. எனவே, பராமரிப்பு இன்றி வீணாகும் கட்டடத்தை சீரமைத்து மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை