உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெமிலி கொசஸ்தலை ஆறு குப்பை கழிவுகளால் மாசு

நெமிலி கொசஸ்தலை ஆறு குப்பை கழிவுகளால் மாசு

நெமிலி, : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் சேகரிக்கப்படும் குப்பை, கறியாகூடல் பகுதியில் மக்கும், மக்காத குப்பை என, தரம் பிரிக்கும் திட்டத்தை, பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. எனினும், நெமிலி கொசஸ்தலை ஆற்றிலும், பேரூராட்சி குப்பை கொட்டி நாசப்படுத்தி வருகிறது. கீழ் வெங்கடாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம், கொசஸ்தலை ஆற்றில் மற்றொரு பகுதியில், தனி நபர்கள் சிலர் முடிக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்.இதனால், கொசஸ்தலை ஆற்றுப்படுகை குப்பை, முடிக்கழிவுகளால் மாசு அடைந்துள்ளது. பொதுப்பணி துறை நிர்வாகம், இதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.நெமிலி கொசஸ்தலை ஆற்றில் குப்பைக் கொட்டி மாசுப்படுத்துவோர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை