உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டும் குழியுமான சதாவரம் சாலை

குண்டும் குழியுமான சதாவரம் சாலை

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் மலையாள தெரு வழியாக, சதாவரம் கிராமத்திற்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள மும்முனை சாலை சந்திப்பில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.இதனால், சாதாரண மழைக்கே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.வேகமாக செல்லும் வாகனங்களால் சகதிநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மலையாள தெருவில் சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்கமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை