உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்ந்த மழைநீர் கால்வாய் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்

துார்ந்த மழைநீர் கால்வாய் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட வடமங்கலம் ஊராட்சி, காந்தி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2023ம் ஆண்டு, கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டன.இந்த நிலையில், மழைநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. மண் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கி, மழைநீர் கால்வாய் முழுமையாக துார்ந்து உள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.அதேபோல், மழைக்காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ