உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இறுதி ஊர்வலத்தில் வாலிபரை தாக்கிய இருவருக்கு காப்பு

இறுதி ஊர்வலத்தில் வாலிபரை தாக்கிய இருவருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ், 21. இவர், நேற்று முன்தினம், அவரது பாட்டியின் இறுதி சடங்கில் பங்கேற்க, ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு சென்றார். அப்போது, இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது நண்பரான ஏலக்காய்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி இருவரும், சுபாஷை சரமாரியாக தாக்கினர்.இதுகுறித்து, சுபாஷ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சுப்பிரமணி, சக்தி இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை