உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புஜங்காசனம் யோகா செய்து மாணவ -- மாணவியர் சாதனை

புஜங்காசனம் யோகா செய்து மாணவ -- மாணவியர் சாதனை

வாலாஜாபாத்: சர்வதேச 10ம் ஆண்டு யோகா தினத்தையொட்டி, வாலாஜாபாத் சுகாதார விளையாட்டு அகாடமி சார்பில் நேற்று மாணவ - மாணவியருக்கான யோகா பயிற்சிகள் நடைபெற்றன. பழையசீவரம் மான்போர்ட் பள்ளி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சாலவாக்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 6 - 18 வயது வரையிலான 200 மாணவ - மாணவியர், 30 நிமிடங்கள் தொடர்ந்து புஜங்காசனம் யோகா செய்து சாதனை படைத்தனர். வாலாஜாபாத் சுகாதார விளையாட்டு அகாடமி நிறுவனர் கவிதா மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.திம்மையம்பேட்டை ஊராட்சி தலைவர் கல்பனா, யோகா ஆசிரியர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர். யோகாவில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் பாராட்டு சான்று, பேட்ஜ், மெடல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ