உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வட்டாட்சியர் அலுவலகம் முன் குளம் போல் தேங்கிய மழைநீர்

வட்டாட்சியர் அலுவலகம் முன் குளம் போல் தேங்கிய மழைநீர்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்- - ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள், இந்த அலுவலகத்திற்கு வருவாய் துறை சார்ந்த மனுக்கள் அளிக்க தினசரி வந்து செல்கின்றனர்.இந்த அலுவலகத்திற்கு முன் உள்ள வளாகம் தாழ்வாகவும், மழைநீர் வெளியேற வசதி இல்லாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுதும், மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்த மழையால், வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் வழி, நீரில் மூழ்கி காணப்படுகிறது.ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதே நிலை தொடர்கிறது. இதனால், அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் வழிவகை ஏற்படுத்த பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ