| ADDED : ஜூன் 04, 2024 04:07 AM
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கண்ணத்தாங்கள் பகுதியில் உள்ள, பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து, நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல், துாக்கில் தொங்கியபடி, அழுகிய நிலையில் இருந்தது.தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உடல் முழுதும் அழுகிய நிலையில் உள்ளதால், அவர் உயிரிழந்து 20 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். இதனால், இறந்தவர் யார் என்பது அடையாளம் காண முடியாமல் உள்ளது.அவர் யார் என்பது குறித்தும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து, துாக்கில் தொங்கவிட்டு சென்றனரா என, பல கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.