உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான மின்கம்பம் படப்பையில் மாற்றியமைப்பு

சேதமான மின்கம்பம் படப்பையில் மாற்றியமைப்பு

படப்பை: வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி அரசு பேருந்துகள், தொழிற்சாலை பேருந்துகள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகம் செல்கின்றன.இந்த சாலையில், படப்பை, ஆதனஞ்சேரியில் சாலையோரம் உயர் மின் அழுத்த ஒயர்களை தாங்கி நிற்கும் மின் கம்பம் கான்கிரீட்பெயர்ந்து கட்டுமான கம்பிகள் தெரிந்த படி பலவீனமாக இருந்தது.வாகனங்கள் லேசாக உரசினாலோ அல்லது பலத்த காற்றடித்தாலோ முறிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, படப்பை மின் வாரிய அலுவலகத்தினர் சேதமடைந்த கம்பத்தை மாற்றி சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை