உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் மீது மின் வசதி ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் மீது மின் வசதி ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத் : வாலாஜாபாத் -- வண்டலுார் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த மேம்பாலத்தின் இருபுறமும், மின் விளக்கு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை