உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி கிராமத்தில் உள்ள பெரிய தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாத்தணஞ்சேரியில் பல்வேறு தெருக்களில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், பெரிய தெரு வழியாகவே சென்று வருகின்றனர்.மழை நேரங்களில் இத்தெருவின் தாழ்வான பகுதி களில் மழை நீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. இதனால், அப்பகுதி வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் தெருவில் தேங்கும் மழை நீரில் நடந்து சென்று சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் இத்தெருவில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, சாத்தணஞ்சேரி பெரிய தெரு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை