உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தவெளி கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்க கோரிக்கை

திறந்தவெளி கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவித்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்டது காவூர் கிராமம். இக்கிராமத்தில், 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் குடிநீர் தேவைக்கு அப்பகுதி பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் உறிஞ்சும் தண்ணீரை பூமிக்கடியில் பதித்த குடிநீர் பைப் மூலம், வீட்டுக் குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பருவமழை காலத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், ஆற்றில் பதித்த குடிநீர் பைப்கள் மற்றும் கேபிள் ஒயர்கள் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது.இதனால், மழைக்காலத்தில் காவூர் மக்களுக்கு குடிநீர் உபயோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி ஆற்றங்கரையையொட்டிய பகுதியில் திறந்தவெளி கிணறு அமைத்து, அதன் மூலம் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை