மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
8 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
8 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
8 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடிகள் மற்றும் மரக்கன்றுகளால், மேம்பாலம் உறுதியிழக்கும் அபாயம் உள்ளதால், செடிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜபாத் சாலைகள் இணையும் நான்குவழி சாலை சந்திப்பில், ஒரகடம் மேம்பாலம் உள்ளது.மேம்பாலம் வழியாக காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த மேம்பாலம், பராமரிப்பு இல்லாமல் உள்ளது.மேம்பால சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.அதே போல், மேம்பாலத்தின் மீதுள்ள மின் கம்பங்களில், சில கம்பங்கள் உடைந்து உள்ளன. மேலும், மேம்பாலத்தில் ஆங்காங்கே அரசமர செடிகள் முளைத்து உள்ளன. இதனால், பாலம் உறுதியிழக்கும் நிலை உள்ளது.எனவே, மேம்பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றுவதுடன், பாலத்தை முறையாக பராமரிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago