உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் வைப்பூர் குடியிருப்புவாசிகள் பீதி

கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் வைப்பூர் குடியிருப்புவாசிகள் பீதி

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.சாலையை மறித்து நிற்கும் நாய்களால், பள்ளி செல்லும் மாணவியர், பெண்கள், முதியோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிப்பதற்காக குரைத்தபடி விரட்டி செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இரவு நேரங்களில் கூட்டமாக திரியும் நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேபோல், நள்ளிரவு நேரங்களில் கூட்டமாக சேர்ந்து குரைப்பதால், மக்கள் துாக்கம் இழக்கின்றனர். எனவே, சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை