உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஞ்சள்நீர் கால்வாய் ஓரம் ஊசலாடும் கேபிள் கம்பங்களால் விபத்து அபாயம்

மஞ்சள்நீர் கால்வாய் ஓரம் ஊசலாடும் கேபிள் கம்பங்களால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.இக்கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்க, தமிழக அரசு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஆனந்தாபேட்டை, மின்நகர், திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் இருபக்கங்களில் புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்க, ஏற்கெனவே இருந்த பழைய பக்கவாட்டு சுவர்கள் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டுள்ளது.இதனால், ஆனந்தாபேட்டையில், மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள பகுதியினர் தனியார் இணையதள கேபிள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பங்கள் நிலத்தடியில் போதுமான பிடிப்பு இல்லாமல் ஊசலாடும் நிலையில் உள்ளது. அதேபோல மின்கம்பங்களும் உள்ளன.கால்வாய் ஓரம் உள்ள மண், மழையின் காரணமாக முற்றிலும் சரிந்து விழுந்தால், தனியார் இணைய தளம் கேபிள் செல்லும் இரும்K கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.மேலும், கால்வாயில் தடுப்புச்சுவர் அகற்றிய பகுதியில், தற்காலிக இரும்பு சாலை தடுப்பு அமைக்காததால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட கால்வாய் ஓரம் ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழும் சூழல் உள்ளது.எனவே, மஞ்சள்நீர் கால்வாய்யோரம், போதுமான பிடிப்பு இல்லாமல் உள்ள தனியார் இணையதள கேபிள் கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும், கால்வாய்யோரம் இரும்பு தடுப்பு அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி