உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ஓட்டு சேகரிப்பில் ஊரக வளர்ச்சி ஊழியர்கள்

காஞ்சியில் ஓட்டு சேகரிப்பில் ஊரக வளர்ச்சி ஊழியர்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தலுக்காக ஓட்டு சேகரிப்பில் ஊரக வளர்ச்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.பி., - செல்வம் அறிமுக கூட்டங்கள் மற்றும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் மக்கள் நலப்பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் நேரடி மற்றும் மறைமுகமாகவும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேட்பாளர்கள் சார்பாக ஓட்டு சேகரிக்கக் கூடும் என, அரசியல் கட்சியினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.மேலும், தேர்தல் கட்டுப்பாடுகள் எல்லாம், நமக்கு இல்லை என, அலட்சியமாக சுற்றித் திரிகின்றனர். இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாட்டை சுழற்றுவாரா என, அரசியல் விமர்சகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை