உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல் போன் பறித்த இருவருக்கு காப்பு

மொபைல் போன் பறித்த இருவருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அமர்ஜித் துமல், 26; ஒரகடம் அடுத்த மாத்துாரில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அமர்ஜித் துமலை மடக்கி, அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.இது குறித்த புகாரின்படி, குன்றத்துாரைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயணன், 22, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அஷ்வக், 20, ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்