உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆவணமின்றி கொண்டு சென்ற 388 லி., மெத்தனால் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற 388 லி., மெத்தனால் பறிமுதல்

திருப்போரூர்:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அடங்கிய திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பூஞ்சேரி இ.சி.ஆர்., சாலையில், நேற்று முன்தினம் பறக்கும் படை கண்காணிப்பு குழு அதிகாரி கிருஷ்ணவேணி தலைமையில் வாகன சோதனை நடந்தது.அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி, மினி லோடு வாகனம் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில், ஒரு கேனுக்கு 4 லிட்டர் வீதம், 72 கேன்களில் 288 லிட்டர் மெத்தனாலும், 2.5 லிட்டர் வீதம் 40 கேன்களில், 100 லிட்டர் மெத்தனாலும் இருந்தது.மேலும் விசாரணையில், திருமழிசை சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு, ஆவணத்தில் குறிப்பிட்டவாறு 200 லிட்டருக்கு பதில், கூடுதலாக 288 லிட்டரும், ஆலத்துார் சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 150 லிட்டருக்கு பதிலாக 100 லிட்டரும் எடுத்து செல்லப்பட்டது தெரிந்தது.முறையான ஆவணங்கள் இல்லாததால், 388 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ