உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன பப்ஸ் விற்பனை

ஆவடி சினிமா தியேட்டரில் கெட்டு போன பப்ஸ் விற்பனை

ஆவடி : ஆவடி ஜெ.பி.எஸ்டேட், செல்லியம்மன் கோவில் தெருவில்,'ரெமி சினிமாஸ்' திரையரங்கம் உள்ளது.மொத்தம், 518 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், 300க்கும் மேற்பட்டோர் படம் பார்த்தனர்.இடைவேளையின் போது, ஆவடி கோவர்த்தனகிரியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், 'பப்ஸ், பாப்கார்ன், சீஸ்பால்ஸ்' உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கியுள்ளார். அவை கெட்டுப் போய் இருந்ததால், இது குறித்து திரையரங்க மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.கெட்டுப் போன 'பப்ஸ்' உள்ளிட்டவற்றை குழந்தைகள் சாப்பிட்டு விட்டதால், அதிர்ச்சியான பார்வையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், டிக்கெட் கவுன்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.தகவலறிந்து வந்த ஆவடி போலீசார், திரையரங்கு மேலாளர் சந்தோஷ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.மேலும், கெட்டுப் போனதாக கூறப்பட்ட தின்பண்டங்கள், உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டன. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஜூலை 15, 2024 10:22

நல்ல தகவல். கெட்டுப்போன பதார்த்தம் மட்டும் அல்ல. வீட்டில் தயார் செய்திடும் கடைகளில் வாங்கும் பலகாரங்கள் சுத்தமானவை என்று கூறமுடியாது. காரணம் எதுவும் செக்கு எண்ணையில் தயார் செய்தவை அல்ல. எனவே வீடுகளில் பண்டிகைகள் காலங்களில் செய்திடும் பலகாரங்களில் செக்கு எண்ணையில் செய்வது நல்லது. சமையலுக்கு மட்டுமாவது செக்கு ஆயில் உபாயகப்படுத்தவும். உடல் நன்றாக இருந்தால்தான் தேவையற்ற செலவுகள் குறையும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ