| ADDED : ஆக 18, 2024 11:48 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பொய்கையாழ்வார் குளம், பெருமாளின், 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது.இக்குளத்தின் மேற்கு பகுதி சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக, 'மேன்ஹோல்' வழியாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.இதனால், யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி கோபால்சாமி தோட்டம், வெங்கடேசபாளையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பாதசாரிகள், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பொய்கையாழ்வார் குளக்கரை சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.