உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு ஏரி சீரமைப்பு பணி தீவிரம்

செவிலிமேடு ஏரி சீரமைப்பு பணி தீவிரம்

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழையையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரி சீரமைக்கவும் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை, நகராட்சி, மாநகராட்சி, நெடுஞ்சாலை, நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி இருந்தார்.அதன்படி, நீர்வள ஆதார துறையினர், காஞ்சிபுரம் தாலுகாவில், 16 ஏரிகளை சீரமைத்து வருகின்றனர். ஏரிகளில் சீரமைப்பு பணி சிலவற்றில் முடிந்துவிட்டது. சில ஏரிகள் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக சீரமைப்பு பணியை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.அதன்படி,காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள செவிலிமேடு ஏரி 1.02 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதில், ஏரிக்கரை பலப்படுத்துதல், ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கலங்கல், பாசனத்திற்காக ஏரி நீர் திறந்துவிடப்படும் ஷட்டர், உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.செவிலிமேடு ஏரியை நம்பி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது.காஞ்சிபுரம் நகரை ஒட்டி இந்த ஏரி இருப்பதால், நிலத்தடி நீர் மட்டமும் அப்பகுதியில் குறையாது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் மீதமுள்ள சீரமைப்பு பணியை நீர்வள ஆதார துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை