உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழிகாட்டி பலகை மறைப்பு தடம் மாறும் வாகன ஓட்டிகள்

வழிகாட்டி பலகை மறைப்பு தடம் மாறும் வாகன ஓட்டிகள்

பரந்துார்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒரு வழி சாலை இருந்தது. இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், மேம்படுத்தப்பட்ட இரு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இரு வழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு வந்தது.மேலும், சாலை வளைவுகள், வேகத்தடை, கிராமத்தின் பெயர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை பொருத்தப்பட்டது.ஆனால், சாலையோரம் முறையாக பராமரிக்கப்படாததால், கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.குறிப்பாக, காட்டுப்பட்டூர் வளைவு, பரந்துார் வளைவு, கொட்டவாக்கம் ஊராட்சி, மூலப்பட்டு ஆகிய வளைவுகளில், கருவேல மரங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன. இந்த புதரில் எச்சரிக்கை பலகையை மறைக்கும் அளவிற்கு, கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, எச்சரிக்கை பலகைகளை மறைக்கும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை