உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழையால் மண் அரிப்பு ; காஞ்சியில் சாலையில் பள்ளம்

மழையால் மண் அரிப்பு ; காஞ்சியில் சாலையில் பள்ளம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஹாஸ்பிட்டல் சாலை, ரயில்வே சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், ஹாஸ்பிட்டல் சாலையுடன், ரயில்வே சாலை இணையும் மும்முனை சாலை சந்திப்பு வளைவு பகுதி அருகில், சில நாட்களுக்கு முன், காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு காரணமாக சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.சேதமடைந்த சாலையை சீரமைக்காமல், பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில், இரும்பு சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை வளைவில் இரும்பு தடுப்பு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறுகலான இடம் என்பதால் அடிக்கடி வாகன விபத்தும் ஏற்படுகிறது.எனவே, ஹாஸ்பிட்டல் சாலை -- ரயில்வே சாலை சந்திப்பில், சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை