உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, வரும் 23ம் தேதியன்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி, வரும் 25ம் தேதியன்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி பள்ளி மாணவர்களுக்கு காலை 9:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கும் நடைபெற உள்ளது.அந்தந்த பள்ளி, கல்லுாரியிலிருந்து இருவர் வீதம், கல்வி நிறுவனத்தின் முதல்வரே தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி