உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநில கபடி எஸ்.ஆர்.எம்., கில்லி

மாநில கபடி எஸ்.ஆர்.எம்., கில்லி

சென்னை, அம்மன் பிரதர்ஸ் கபடி கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி, புதுக்கோட்டையில் நடந்தது. போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி உட்பட ஏராளமான அணிகள் பங்கேற்றன.காலிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., 31 - 20 என்ற கணக்கில் திருச்சி மாவட்ட அணியையும், அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 31 - 12 என்ற கணக்கில் சி.வி.எஸ்., பவுண்டேசன் அணியையும் தோற்கடித்தன. இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இப்போட்டியில், 21 - 18 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.புதுக்கோட்டை மாவட்டம், சி.வி.எஸ்., பவுண்டேஷன், பெரும் மாநாடு அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ